சூலூர் ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பாக கார்கில் வெற்றி தினம் அனுசரிக்கப்பட்டது
கார்கில்போர் வெற்றிதினம்
சூலூர் ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை மாணவர்கள் சார்பாக கார்கில் வெற்றி தினம் அனுசரிக்கப்பட்டது. போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் திருவுருவப் படத்திற்கு கல்லூரி செயலர் பேராசிரியர் சாரம்மா சாமுவேல்,முதல்வர் டாக்டர் சிவக்குமார், துணை முதல்வர் டாக்டர் ஐயப்பதாஸ், பேராசிரியர்கள், தேசிய மாணவர்படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் தேசிய மாணவர்ப் படை மாணவர்களால் வரையப்பட்ட கார்கில் போர் குறித்த ஓவியம் அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சியை கல்லூரி தேசிய மாணவர்ப் படை அலுவலர் கேப்டன் டாக்டர் தீபக் ரிஷாந்த் ஒருங்கிணைத்து நடத்தினார்.