சூலூர் பகுதியில் அனைத்து வியாபாரிகள் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா

சூலூர் பகுதியில் அனைத்து வியாபாரிகள் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா 

 சென்னை மாநிலத்தின் மூன்றாவது முதலமைச்சராக 9 ஆண்டு காலம் முதல்வராக இருந்து தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கு பல்வேறு வகைகளில் முன்னெடுத்த காங்கிரஸ் தலைவராக பணி ஆற்றிய காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு சூலூர் புதிய பேருந்து நிலையம் முன்புறம் அலங்கரிக்கப்பட்ட வளைவில் காமராஜர் அவர்களின் திருவுருவ படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நெல்லை காசி எட்வின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கண்ணம்பாளையம் காங்கிரஸ் கட்சி தலைவர் சத்தியமூர்த்தி, சூலூர் பேரூராட்சி உறுப்பினர் மணிமேகலை, ராஜம் பேக்கரி அல்போன்ஸ், திருப்பதி ஸ்டோர் பாலசுப்ரமணியம், இரட்டை பாதை சிவபெருமாள், உட்பட சூலூர் பகுதியில் உள்ள வியாபாரிகள், பள்ளிமாணவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் மாணவ மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்