மயிலாடுதுறை ஓம் சக்தி மன்ற ஆன்மீக ஊர்வலம் முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை *ஓம் சக்தி மன்ற ஆன்மீக ஊர்வலம் முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் தொடங்கி வைத்தார்!* 

 மயிலாடுதுறை உள்கேணி ஓம் சக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூரகஞ்சி கலயம் ஏந்தி வரும் ஆன்மீக ஊர்வலம் வார வழிபாட்டு மன்ற நிர்வாகி கௌரிசங்கர் கங்கை ஆறுமுகம் தலைமையில் கிட்டப்பா நகர் பாலம் அருகில் இருந்து தொடங்கியது. நூற்றுக்கணக்கான செவ்வாடை அணிந்த பெண்கள் கஞ்சி கலயம் ஏந்தியும் தீச்சட்டி சுமந்தும் ஊர்வலத்தில் பங்கேற்றார்கள். ஆன்மீக ஊர்வலத்தினை மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் தொடங்கி வைத்தார். உலக நன்மைக்காகவும் மழை வளம் வேண்டியும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும் என்றும் மழை வளம் பெருகி விவசாயம் சிறக்க வேண்டும் என்றும் பிரார்த்தனைகளை முன்வைத்து இப்பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நகர்மன்ற உறுப்பினர் ஆர்.சபா, சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் உள்பட ஏராளமான ஆன்மீக அன்பர்கள் பங்கேற்றார்கள். ஊர்வலம் கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் வழியாக அண்ணா வீதி, பெரியார் ஈவேரா தெரு, மேல ஒத்த சரகு வழியாக மயூரநாதர் நகரில் உள்ள உள்கேணி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தினை அடைந்தது. அங்கு சிறப்பு கேள்விகளுடன் அனைவரும் ஏந்தி வந்த கஞ்சினை ஒன்றாக கலந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கப்பட்டது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்