கள்ளப்பாளையம் ஊராட்சி நிர்வாகம், கோயம்புத்தூர் கேன்சர் புவுண்டேஷன், கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனை இணைந்து நடத்தும் பெண்களுக்கான பரிசோதனை முகாம்

கள்ளப்பாளையம் ஊராட்சி நிர்வாகம், கோயம்புத்தூர் கேன்சர் புவுண்டேஷன், கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனை இணைந்து நடத்தும் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை 23/08/2024  அன்று கள்ளப்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது. 
வெளி மருத்துவமனைகளில் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஆறாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை செலவாகும். இந்தப் பரிசோதனை 
கள்ளப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் முற்றிலும் இலவசமாக 
நடத்தப் பட்டது. கள்ளப்பாளையம், சின்னக்குயில் பாப்பம்பட்டி, பகுதிகளைச் சேர்ந்த 130 க்கும் மேற்பட்ட பயனாளிகள் இந்தப் பரிசோதனையை மேற்கொண்டு பயனடைந்தனர்.
 சமூக ஆர்வலர் பொன்.கார்த்திகேயன் மற்றும் கள்ளப்பாளையம் ஊராட்சியில் தொடர்ந்து 25ஆண்டுகாலமாக மக்கள் பிரதிநிதியாக இருந்துவரும்
ஒன்றாவது வார்டு சாதனை உறுப்பினர் 
கவிதா கார்த்திகேயன்
ஆகியோர் இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை முன்னின்று நடத்தினார்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்