திருப்பூரில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை

 திருப்பூர் ஊத்துக்குளி ரோடு அணைக்காடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் குடியிருந்து வருகின்றனர். இதில் ஒரு காம்பவுண்டில் மூன்று தளங்களில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் குடியிருந்து வருகின்றனர் இதில் முதலாவது தளத்தில் உள்ள ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து சந்தேகம் அடைந்த அருகில் வசிப்பவர்கள் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 


சந்தேகத்தின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்பக்கமாக பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் வராண்டாவில் ஒரு பெண்ணும் படுக்கை அறையில் அவரது கணவர் மற்றும் மகள் என மூன்று பேரும் உடல் உப்பிய நிலையில் சடலமாக இருந்துள்ளனர். 

உயிரிழந்து  நான்கு நாட்கள் ஆகி இருக்கலாம் எனவும் துர்நாற்றம் வீசிய நிலையில் பிரேதங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் நாக சுரேஷ் (35) அவரது மனைவி விஜி( 29) இவர் அணைக்காடு பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.  இந்நிலையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.


 கடன் பிரச்சனையா அல்லது குடும்பப் பிரச்சனையில் ஏதேனும் தற்கொலை செய்து கொண்டார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 அணைக்காடு  பகுதியில் உள்ள வீட்டிற்கு குடிவந்து ஒரு வருடங்களே ஆன நிலையில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்