புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டம் அரியாங்குப்பத்தில் நடைபெற்றது உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த கோரி அரசை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன் படி முதல் கட்ட ஆர்ப்பாட்டம் உழவர்கரை நகராட்சி எதிரில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டம் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தின் எதிரில் வீராம்பட்டினம் செல்லும் சந்திப்பில் மெயின் ரோட்டில் உள்ள பிரம்மன் கோயில் அருகில் நடைபெற்றது. அரியாங்குப்பம் பைபாஸ் சிக்னல் அருகில் கழக கொடியேற்று விழா நடைப்பெற்றது மாநில செயலாளர் சிவகுமாரன் தலைமையில் கழகத்தலைவர் பேராசிரியர் மு.ராமதாஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டதில் இணைப்பு உரையை மாநில பொருளாளர் முனைவர் பெண்ணியம் செல்வகுமாரி வழங்கி விழிப்புணர்வுக் கோஷங்கள் எழுப்பினார் .
ஆர்ப்பாட்டதை மாநில இணை செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் கலியப்பெருமாள், உதவி செயலாளர் இதய வேந்தன், மாநில மீனவர் அணி தலைவர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில மகளிர் அணி தலைவர் விமலா பெரியாண்டி வரவேற்றார். கழகத்தின் சேர்மன் ஆர்.எல் வெங்கட்ராமன் மற்றும் மாநில பொது செயலாளர் பேராசிரியர் எ.மு.ராஜன் ஆகியோர் நோக்க உரை ஆற்றினார்கள். கழகத் தலைவர் பேராசிரியர் மு.ராமதாஸ் அவர்கள் ஆர்ப்பாட்டதை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜெகநாதன், தனஞ்செயன், சந்திரன், கண்டன உரை ஆற்றினார்கள் மற்றும் ஆர்ப்பாட்டதில் மாநில செயலாளர்கள் பரந்தாமன், ரவிகுமார், மோகனசுந்தரம், துணை செயலாளர் சுப்ரமணியன்
மாநில உதவி செயலாளர் ஆண்டாள் ,சிறுபான்மை அணி தலைவர் ரஞ்சித்குமார் ,சுப்ரமணி, பீட்டர், கோமதி சுலோச்சனா கௌரி, தேவராசு , மற்றும் ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாநில உதவி செயலாளர் விஜயகுமார் ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்