பவானிசாகர் அருகே, தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, அ.பண்ணாரி எம்.எல்.ஏ. நிதி உதவி.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பவானிசாகர் அருகேயுள்ள ராஜன் நகரில், பவானிசாகர் - பண்ணாரி சாலையில், சிற்றுண்டி மற்றும் கோழி இறைச்சி கடை நடத்தி வந்தனர் முத்துசாமிதம்பதியினர்.இவர்களது கடைஅருகே முடித்திருத்தும் கடையை ரங்கசாமி என்பவர் நடத்தி வந்தார். மூன்று கடைகளும் மேற்கூரை தென்னை ஓலையால் மேயப்பட்டு, தகர சீட் போடப்பட்டிருந்தது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு, முத்துசாமி கடையின் பின்புறம், தீப்பற்றி எரிவதை கண்ட சிலர், கடையின் முன்புறம் இருந்த முத்துச்சாமிக்கு தகவல் அளித்து, தீயை அணைக்க முற்பட்டும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்புத்துறை யினர் சம்பவ இடம் விரைந்து, தன்ணீர் பீய்ச்சி அடித்து, தீயை கட்டுப் படுத்தினர். இதற்குள் மூன்று கடை களும், தீயில் எரிந்து முற்றிலும் சேதமானது. விபத்து குறித்து சத்திய மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர் சம்பவம் குறித்து அறிந்த, பவானி சாகர் எம்.எல்.ஏ அ .பண்ணாரி மற்றும் அதிமுக சத்தி வடக்கு ஒன்றிய செய லாளர் சி.என். மாரப்பன் ஆகியோர், தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை, நேரில்சந்தித்துஆறுதல்கூறியும்,நிதிஉதவியும் அளித்தனர். மேலும் சட்ட மன்ற உறுப்பினர் அ.பணணாரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு,தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க அறிவுரை வழங்கினார்.சட்ட மன்ற உறுப்பின ருடன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பிரபாகரன், ராஜன் நகர் பகுதி, அதி முக கட்சி நிர்வாகிகள் சரவணன், செந்தில்குமார், சின்னபொன்னான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


