வரி உயர்வுகளை கண்டித்து திருப்பூரில் அதிமுகவினர் உண்ணாவிரதம்.... 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


திருப்பூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் மற்றும் கழிவு வரி உயர்வு, ஆண்டுதோறும் ஆறு சதவீதம் சொத்து வரி உயர்வு, தொழில் வரி உயர்வு, வணிக நிறுவனங்களிடம் வசூலிக்கும் வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு, வரிகளுக்கு அபராதம் போன்றவற்றை திரும்ப பெறுவதற்கும், அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும்  திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

 திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப்போராட்டத்துக்கு, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் வரவேற்புரையாற்றினார்.. இந்த போராட்டத்தை முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி.வி. ஜெயராமன் துவக்கி வைத்தார்.

திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் உடுமலை.கே. ராதாகிருஷ்ணன்,எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.



மேலும்  சட்டமன்ற உறுப்பினர்கள் மடத்துக்குளம் மகேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.எஸ்.என்.நடராஜன், சிவசாமி, பழனிச்சாமி உள்பட அதிமுக   மாமன்ற உறுப்பினர்கள் சேகர், ஆனந்தி  சுப்பிரமணியம், தமிழ்ச்செல்வி கனகராஜ், தங்கராஜ், முத்துச்சாமி, தனலட்சுமி, திவ்யபாரதி பாலாஜி, சகுந்தலா ஈஸ்வரன், தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், சின்னசாமி, சாந்தி பாலசுப்பிரமணியம், புஷ்பலதா தங்கவேலன், பகுதி, ஒன்றிய, நகர, கழக செயலாளர்கள்,  நிர்வாகிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  பங்கேற்றனர்.















Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!