எம்.சாண்ட், ஜல்லி விலை உயர்வு... 250 டிப்பர் லாரிகள் வேலை நிறுத்தம்!

திருப்பூரில் எம் சாண்ட்,   யூனிட் ஆயிரம் ரூபாய் உயர்த்தியதை கண்டித்தும், உடனடியாக விலையேற்றத்தை திரும்ப பெற வலியுறுத்தியும்  திருப்பூர் ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தினர் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை, நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்த போராட்டம் நடக்கும் எனவும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் இயக்கபடாது என ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத் செயலாளர் மூர்த்தி பேட்டி அளித்தார்.

திருப்பூர் ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் சங்கத்தின் செயலாளர் மூர்த்தி  தலைமையில் நடைபெற்றது.

இதில் கட்டுமான பணிக்கு மிகவும் தேவையான மணல் குவாரிகள் இயங்காத சூழ்நிலையை பயன்படுத்தி செயற்கை மணல் தயாரிக்கும் எம் சாண்ட் கிரஷர்கள் கடுமையான விலை உயர்வை திட்டமிட்டு ஏற்படுத்தி வருவதாக ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத் செயலாளர் மூர்த்தி தெரிவித்தார். 

மேலும் அவர் கூறுகையில்,  3800 ரூபாய்க்கு விற்பனையான ஒரு யூனிட் எம்சாண்ட் தற்பொழுது 1200 ரூபாய் உயர்த்தப்பட்டு 5000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வீடுகட்டும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். உடனடியாக  விலை உயர்வை திரும்ப பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் டிப்பர் லாரிகளில் தமிழக அரசு அறிவித்துள்ள அளவுகளில் மட்டுமே லோடு ஏற்ற வேண்டும்.கூடுதலாக லோடு ஏற்ற கிரஷர் உரிமையாளர்கள் நிர்ப்பந்திக்க கூடாது. ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தோம்.

 ஆனால் இதுவரை அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, பிரஷர் உரிமையாளர்கள் எம்சாண்டுக்கு கூடுதலாக விலை அமுல் படுத்தி உள்ளதால் லாரி உரிமையாளர்கள் மட்டுமின்றி வாடகைக்கு லாரி ஓட்டுபவர்களும் ஓட்டுநர்கள் சங்கத்தினரும் இன்ஜினியரிங் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்களும் குறிப்பாக பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இந்த விலை ஏற்றதால் பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெறாமல் தேக்கமடைந்துள்ளது. எனவே தமிழக அரசு இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு விலை ஏற்றத்தை திரும்ப பெற வழிவகை செய்ய வேண்டும் அதற்காக ஊத்துக்குளி டிப்பர் உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நாளை முதல் திருப்பூர் கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களைச் சேர்ந்த 5  ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் இயங்காது. இதற்கு இத்தலாரி ஓட்டுநர்கள் சங்கத்தினரும் ஆதரவு அளித்துள்ளனர். மக்களை பாதிக்கும் இந்த விலையேற்றத்தை திரும்ப பெற தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!