கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், அறிவொளி சுடர்கள் செயற்குழு கூட்டம்..

கோவை அறிவொளி இயக்க, முன்னாள் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கு பெரும் அறிவொளி சுடர்கள் செயற்குழு மற்றும் கோட்ட ஒருங்கிணைப்பாளர் கூட்டம், பொள்ளாச்சி வங்கி ஊழியர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைவர் உடுமலை சிவராஜ்  தலைமை தாங்கினார் முன்னதாக,அமைப்பின் பொருளாளர் முனைவர் ஐ. மோகன்தாஸ் வரவேற்புரையாற்றினார். செயலர் குவளை மணியன் செயல்பாடுகள் எதிர்வரும் புத்தக வெளியீடு, செயற்குழு கூட்ட நோக்கம் குறித்து பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அறிவொளி தங்க புத்தக வெளியீடு , நிதி மற்றும் தகவல் திரட்டுதல் குறித்த தங்களின் ஆலோசனை முன்வைத்தனர்.

கூட்டத்தில், அறிவொளி  தங்கப் புத்த கம், பிப்ரவரி -2025 இல்-அச்சடிப்பது, புத்தகத்தை. அறிவொளி தலைவர் ச.வி.சங்கர் இ.ஆ.ப. (ஓய்வு) அவர்களால் வெளியீடு செய்வது எனவும், புத்தக வெளியீடு, அதில் இடம்பெறும் கருத்துக்களை ஆலோசிக்க 9 நபர்கள் கொண்ட குழு தேர்ந்தெடுத்தல் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புத்தக அச்சு செலவினை மேற்கொள்ள, நிதியுதவி அளிக்க உள்ளவர்கள் விபரத்தினை முனைவர் மோகன்தாஸ் எடுத்து உரைத்தார். கூட்டத்தில் அறிவொளி சுடர்கள் செயற்குழு மற்றும் கோட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மோத்தி ராஜ், நாராயணசாமி, ஆனைமலை ராமகிருஷ்ணன், நிஜாமுதீன், சோமசுந்தரம், துரைசாமி, கவிதா, ஓ.கே. மரகதம், சாவித்திரி, மனோன்மணி, மாஸ்டர் சாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக, ஆசிரியர் மனோகரன் நன்றி கூறினார்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்