மலைமக்களின் குலதெய்வம் அல்மோரா நந்தாதேவி!

இந்தியாவின் இரண்டாவது உயரமான மலைச்சிகரம் தான் நந்தா தேவி. உத்தரகண்ட் மாநிலத்தின் பெருமையாக, கம்பீரமான அடையாளமாக நிற்கிறது. 25 ஆயிரத்து 63 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை கர்வால் இமயமலையின் மேற்கு கிளையின் ஒரு பகுதியாகும். இந்த சிகரத்தின் சுற்றுப்பகுதியில் நந்தாகினி நதி உற்பத்தியாகி ஓடுகிறது. இந்த நந்தாதேவி சிகரமானது துர்க்கையின் வடிவமாகும். இமயமலையின் பல்வேறு மலைக்கிராமங்களில் நந்தாதேவி கும்பிடப்படுகிறார். அப்படி வழிபடப்படும் ஒரு முக்கியமான இடம் தான், உத்தரகாண்டில் அல்மோராவில் உள்ள நந்தாதேவி கோவிலாகும். நந்தா தேவியைப்பற்றி ஸ்ரீ தேவி பகவத் புராணம், ஸ்கந்த புராணம் மற்றும் துர்கா சப்தசதி போன்ற பண்டைய நூல்கள் குறிப்பிடுகின்றன. சைலபுத்ரி என்றும் அழைக்கப்படும் நந்தா தேவி இமயமலையின் மகளாக கருதப்படுகிறார். பார்வதி தேவியின் ஒன்பது வடிவங்களில் ஒன்றாகும். இயற்கையின் தெய்வமான நந்தாதேவி மலை மக்களையும் நிலத்தையும் பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. அவரை குலதெய்வமாக கும்பிடுகிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, நந்தா தேவி சந்த் மன்னர்கள் நந்தாதேவியை குல தெய்...