வக்கீல் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி தர்ணா!
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் வழக்கறிஞர் முருகானந்தம் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ க்கு மாற்ற கோரி உறவினர்கள் வழக்கறிஞர்கள் அரசு மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டம். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என அவரது தாயார் பேட்டி.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் வழக்கறிஞர் முருகானந்தம் நேற்று பட்டப்பகலில் வழக்கறிஞர் உடையுடன் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொலையான வழக்கறிஞர் முருகானந்தத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது. வழக்கறிஞர் முருகானந்தத்தின் உடலை காண வந்த அவரது தாயார் சுமித்ரா தேவி மற்றும் உறவினர்கள் வழக்கறிஞர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கை சிபிஐ க்கு மாற்ற வேண்டும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தாயார் சுமித்ராதேவி கூறுகையில்,
சொத்து காரணமாக ஏற்பட்ட தகராறால் உறவினரே எனது மகனை கொலை செய்துவிட்டார். ஏற்கனவே எனது கணவரையும் அவர்தான் கொலை செய்தார். அவரை தூக்கிலிடும் வரை நான் ஓய மாட்டேன். இந்த வழக்கை போலீசார் விசாரிக்க கூடாது சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் அப்பொழுதுதான் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் அதுவரை எனது மகனின் உடலை வாங்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், முருகானந்தத்தின் நண்பருமான போஸ் முருகன் கூறுகையில்,
வழக்கறிஞர் முருகானந்தம் கொலை செய்யப்பட்டிருப்பது சாதாரண கொலை அல்ல இதே போல் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இதே மாதத்தில் இவரது தந்தையும் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்த வழக்கில் எந்த நீதியும் கிடைக்கவில்லை பொய் குற்றவாளிகள் ஆஜராகி வெளியே வந்து விட்டார்கள். தற்பொழுது முருகானந்தம் கொலை செய்யப்படுவதற்கு முன்பு கூட தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீசார் இடமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடமும் புகார் தெரிவித்துள்ளார் அதன் பின்னரும் அவரது உயிர் படிக்கப்பட்டுள்ளது இந்த கொலை வழக்கிலும் கூட பொய் குற்றவாளிகள் தான் தாங்களாக முன்வந்து சரவணன் அடைந்துள்ளார்கள் உண்மையான குற்றவாளிகள் வெளியே சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள் எனவே உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் அதற்கு இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் அப்பொழுதுதான் உண்மை நிலவரம் தெரியவரும் என தெரிவித்துள்ளார்