பொங்கலூரில் வீட்டுமனைப் பட்டா கோரி சிபிஎம் தலைமையில் திரண்ட மக்கள்

 


பொங்கலூர் ஒன்றியத்தில் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நூற்றுக்கணக்கான பெண்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில்  திரண்டு மனுக் கொடுத்தனர்.

ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா கோரி பல முறை விண்ணப்பித்தும் வீட்டுமனைப் பட்டா கொடுக்கப்படாத நிலை தொடர்கிறது. பட்டா கொடுப்பதாகச் சொல்லும் அரசு அறிவிப்பும், நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. எனவே வீட்டுமனைப் பட்டா கோரி பொங்கலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மனுக் கொடுத்துக் காத்திருக்கும் போராட்டம் நடத்துவதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்தது.

இதன் அடிப்படையில் பொங்கலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள் செவ்வாயன்று பொங்கலூரில் திரண்டனர். இந்த இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பொங்கலூர் ஒன்றியச் செயலாளர் ஆர்.பாலன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.பவித்ரா தேவி, மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.சம்பத் ஆகியோர் உரையாற்றினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.சிவசாமி, ஏ.அர்ஜூனன், எல்.துரைமுருகன், கே.சிவக்குமார், எம்.விஜயபிரபாகரன், பி.செல்வம் மற்றும் கிளைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

சக்தி நகரில் உள்ள பொங்கலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தின் முன்பாக மக்கள் திரண்ட நிலையில், அனைவரிடமும் தனித்தனியாகப் பெறப்பட்ட வீட்டுமனைப் பட்டா விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டு மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வருவாய் ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர். மொத்தம் 270 மனுக்கள் வழங்கப்பட்டன.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்