மக்கள் மகிழ்ச்சியாக வாழ எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சி மலர வேண்டும்...முன்னாள் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக, தென்னம்பாளையம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள பூத் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான 

பொள்ளாச்சி.வி.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.   

திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
தென்னம்பாளையம் பகுதி கழக செயலாளரும்,மாமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அன்பகம் திருப்பதி வரவேற்புரையாற்றினார்.  கூட்டத்தில்  எடப்பாடியார் அவர்களின் திருப்பூர் சுற்றுப்பயணம் வருகை குறித்தும்,
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் மற்றும் திமுக அரசை கண்டித்து
தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடத்துவது குறித்தும்  முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் ஆலோசனை  வழங்கி சிறப்புரையாற்றினார். 
அப்போது அவர் பேசியதாவது:
2006ல் இடமில்லாதவர்களுக்கு  2 ஏக்கர் நிலம் தருவதாக சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக. 2016ல் எண்ணற்ற பொய்களை சொன்னார்கள் ஆட்சியை பிடித்தார்கள். ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்றார்கள். இன்றுவரை எதுவும் செய்யவில்லை. உங்களுடன் ஸ்டாலின் என்று இப்போது சொல்கிறார். பொய் பித்தலாட்டங்களுக்கு முடிவு கட்டுகிற வகையில், எடப்பாடியார் ஆட்சிக்கு வர வேண்டும். அதற்காக நாம் மக்களிடம் எடப்பாடியாரின் திட்டங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். எடப்பாடியார் அவர்கள் நிலம் இருப்பவர்களுக்கு சொந்தமாக வீடு கட்டித்தரப்படும் என்றும், இடமே இல்லாதவர்களுக்கு இடம் தந்த்து அதில் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என்றும் சொல்லி இருக்கிறார். எடப்பாடியார் கொரோனா காலத்தில் கூட ஒரு பவுன் தங்கம் கொடுத்தார். திருமண உதவி கொடுத்தார். இன்று எதுவுமே இல்லை. இன்று தமிழ்நாட்டில் நடப்பது விடியா ஆட்சி. வேதனையான ஆட்சி. எடப்பாடியார் அவர்கள் தாலிக்கு தங்கம் திட்டம் தொடரும் என்றும் பட்டு வேட்டி, பட்டு சேலை கொடுப்பேன் என்றும் சொல்லி இருக்கிறார். அதிமுக சொன்ன திட்டங்களை நிச்சயமாக செய்யும். விலையில்லா ஆடுகள் வழங்கினோம். அம்மா உணவகங்களை  தொடங்கி மக்களுக்கு மலிவு விலை உணவு வழங்கப்பட்டது. எல்லோரும் பசியாற சாப்பிட்டார்கள். எனவே மக்கள் நலம்பெற வேண்டும் என்றால் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி மலர வேண்டும். அதற்காக நாம் ஒவ்வொரு நாளும் மக்களை சந்திக்கும் இடங்களில் எல்லாம் எடப்பாடியார் அறிவிக்கும் அறிவிப்புகளை கொண்டு சேர்க்க வேண்டும். அதிமுக ஆட்சி அமைய அயராது உழைக்க வேண்டும்  என்று பேசினார். 
இந்நிகழ்வில், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சிவசாமி,திருப்பூர் தெற்கு மத்திய பகுதி கழக செயலாளர் மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடாவுமான கண்ணப்பன்,கழக பொதுக்குழு உறுப்பினர்.தம்பி மனோகரன், கோல்டன் நகர் பகுதி கழக செயலாளர்  ஹரிஹர சுதன்,நல்லூர் பகுதி கழக செயலாளர் வி.பி.என்.குமார், கருவம்பாளையம் பகுதி கழக செயலாளர் சிவாளா தினேஷ்,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தம்பி மைதீன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர்  முருகேசன்,மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர்  வேல் குமார் சாமிநாதன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல்,பனியன் அண்ணா தொழிற்சங்க செயலாளர் விஸ்வநாதன்,வட்ட கழக செயலாளர்கள்  தம்பி சுப்பிரமணியம், ரவி,  பிரபு குமார், கரிக்கடை  ராமசாமி,  கணேஷ்,  கேபிள் சுந்தர், ஆட்டோ கோவிந்தராஜ்,   மோகன்,  மருதையப்பன்,  குருசாமி,  சாமிநாதன்,  நாகராஜ்  உள்பட பலர் பங்கேற்றனர். 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்