இங்கிலாந்து - இந்தியா வர்த்தக ஒப்பந்தம்... மத்திய அமைச்சருக்கு ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் நன்றி!

 

ஏ.இ.பி.சி., துணைத் தலைவர், டாக்டர். ஆ. சக்திவேல்,  மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்து இந்தியா – இங்க்லாந்து இடையேயான வர்த்தக ஒப்பந்தத்திற்காக  நன்றியை தெரிவித்தார்.

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (ஏஇபிசி) துணைத் தலைவர் டாக்டர். ஆ. சக்திவேல், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயலை  புதுதில்லியில் இன்று(29/7/20225) சந்தித்தார்.

இந்தியா–இங்கிலாந்து நாடுகளுக்கிடையே  வரலாற்று சிறப்புமிக்க முழுமையான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்திற்காக தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும்  தெரிவித்துள்ளார்.  

வர்த்தக ஒப்பந்தம் மூலம், அமைச்சரின் தொலைநோக்கு தலைமையையும், இந்த முக்கிய ஒப்பந்தத்தைப் ஏற்படுத்துவதில் அவரது அயராத முயற்சிகளையும் முழு மனதுடன் பாராட்டினார், இனி, இங்கிலாந்து உடனான இந்தியாவின் ஆடை ஏற்றுமதி கணிசமாக உயரும் என்றும் கூறினார். 

இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் முன்னணி பின்னலாடை ஏற்றுமதி மையமான திருப்பூருக்கு வருகை தருமாறு  அமைச்சருக்கு டாக்டர் சக்திவேல் அழைப்பு விடுத்தார். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் CETA  வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திட்டதன் மூலம் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், இந்த மைல்கல்லுக்கு அமைச்சரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் ஒரு பாராட்டு விழா நடத்த ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மாண்புமிகு அமைச்சர் இந்த அழைப்பை மனதார ஏற்றுக்கொண்டு, ஏற்றுமதியாளர்களை சந்திக்க திருப்பூருக்கு வருவதாக உறுதியளித்துள்ளார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து அவர் கூறுகையில்,  CETA ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி இரட்டிப்பாகும் என்றும், அதாவது,  இங்கிலாந்துக்கு தற்போதைய ஆயத்த ஆடை ஏற்றுமதி  1.5 பில்லியன் அமெரிக்க டாலர் -  இது அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 3 பில்லியன் அமெரிக்க டாலர் - என்ற ஏற்றுமதி இலக்கை எட்டுவது மட்டுமல்லாமல்,  கணிசமான வேலை வாய்ப்புகளையும் குறிப்பாக பெண்களுக்கான வேலை  வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்