17 வயது திருப்பூர் சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்... சென்னை நோயாளிக்கு கொண்டு செல்லப்பட்டது இதயம்!

 திருப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்த 17 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம். சென்னையில் உள்ள நோயாளி ஒருவருக்கு பொருத்த இதயம் பலத்த போலீசார் பாதுகாப்புடன் கோவை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரை பகுதியைச் சேர்ந்தவர் எலிசபெத். இவரது கணவர் வேலுச்சாமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மூத்த மகன் இளங்கோவன் (17) பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். தற்போது திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முதலிபாளையம் பகுதியில் தங்கி வருகிறார். கடந்த 21ஆம் தேதி இரவு இளங்கோவன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வட்ட காட்டுப்புதூர் பகுதியில் நேருக்கு நேர் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளங்கோவன் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் இளங்காவனின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்தனர். இதனை தொடர்ந்து இன்று காலை இளங்கோவனின் இருதயம்  , 2 சிறுநீரகம் , கல்லீரல் , 1 கண் ஆகியவை தானமாக பெறப்பட்டது.  இதனை தொடர்ந்து ஒரு சிறுநீரகம் மற்றும் இதயம்  சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. 4 மணி நேரத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு உரியவருக்கு பொருத்தப்பட வேண்டும் என்பதால் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து இன்று 10:45 மணியளவில் எடுக்கப்பட்ட இதயம் 11:45 விமானத்திற்கு அனுப்புவதற்காக இருதயம் போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் வாகனம் முன் செல்ல ஆம்புலன்ஸில் அவசரமாக கொண்டு செல்லப்பட்டது.


 இதேபோல் மற்ற பாகங்கள் கோவையில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இளங்கோவன் அளித்த உடலுறுப்பு தானத்தின் காரணமாக ஆறு பேர் பயனடைந்துள்ளனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!