95வது பிறந்தநாளையொட்டி முன்னாள் ஓருங்கிணைந்த நெல்லை மாவட்ட திமுக பொறுப்பாளருக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து
தூத்துக்குடி முன்னாள் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட திமுக பொறுப்பாளராக பணியாற்றிய கழக முன்னோடி சவுந்தரபாண்டியன் 95வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி நயினார்விளை மேற்கு பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சென்று வாழ்த்து தெரிவித்து கௌரவித்தார்.
சௌந்தரபாண்டியன் திமுக தணிக்கை குழு உறுப்பினராகவும், தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தலைவராகவும், பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்படதக்கது.
நிகழ்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வட்டச் செயலாளர் ரவி இளங்கோ, கவுன்சிலா் மரிய கீதா, மாநகர மாணவரணி அமைப்பாளர் டைகர் வினோத், வட்ட பிரதிநிதிகள் ஏகாம்பரம், இளங்கோ, வட்ட துணைச் செயலாளர்கள் சுந்தர், ராமலட்சுமி, முன்னாள் வட்டச் செயலாளர் கோயில் ராஜ், முன்னாள் கவுன்சிலர் பாலாஜி, திரேஸ்புரம் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெர்சன், பகுதி விவசாய அணி துணை அமைப்பாளர் நடராஜன், பகுதி கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் சிற்றரசு, வட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆஸ்டின், பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா் மற்றும் மணி, அல்பட் மற்றும் குடும்பத்தினா் உடனிருந்தனர்.