பெரிச்சிபாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் துளிர் வினாடி வினா போட்டி
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்ட மையத்தின் சார்பில் துளிர் வினாடி வினா போட்டி திருப்பூர் பெரிச்சிபாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கிளையின் தலைவர் சுதா தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் செல்வராஜ் வரவேற்றார்.
பள்ளியின் மேலாண்மை குழுத் தலைவர் இளவரசி, மாவட்ட பொருளாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் கெளரி சங்கர் போட்டி குறித்து விளக்கினார்.
மாவட்ட உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை போட்டியை துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியை ஆசிரியர் சந்தோஷ் ஆசிரியர் கனகராஜா, ரவி, ஆசிரியர் இர்ப்பான் ஆகியோர் நடத்தி கொடுத்தனர்.
போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து சுமார் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.