தங்களது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை மற்றொருவருக்கு ஒதுக்கியதாக முதியவர்கள் கண்ணீர் புகார்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே புக்குளம் கிராமத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசுஅடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் வேறு ஒரு நபர் குடியிருப்பதால் தங்களுக்கான வீட்டிற்கு செல்ல முடியாமல் வீடு இன்றி கண்ணீர் விட்டு கதறி அழுது முதியவர்கள் வேதனை.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டிற்கு ஒன்றரை வருட காலமாக தவணைத் தொகையை வங்கிக்கு செலுத்தி வரும் நிலையில் வேறு வீடு ஒதுக்கீடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்து யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள் பயப்பட மாட்டேன் என மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்ட முதியவர்கள் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம், புக்குளம் கிராமத்திற்கு உட்பட்ட ஜெ ஜெ நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு என்கிற திட்டத்தில் சந்திரா மாரிமுத்து தம்பதியினருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது,
இவர்களது குடியிருப்பு வீட்டின் எண் 225 என ஒதுக்கீடு செய்யப்பட்டது,
அதிகாரிகள் எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டை வழங்காமல் வேறு ஒரு நபருக்கு வழங்கி உள்ளனர். அவர்களும் எனக்கு ஒதுக்கிடு செய்யப்பட்ட வீட்டில் குடிபுகுந்து வசித்து வருகின்றனர்,
முதியவர்கள் ஆகிய நாங்கள் இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது உங்களுக்கு வேறு ஒரு வீடு ஒதுக்கீடு தருகிறோம் என தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகின்றனர் இந்த நிலையில்
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டிற்கு மாதம்தோறும் வங்கியில் மாதம் 3500 வீதம் ஒன்றரை ஆண்டு காலமாக தவணைத் தொகை கட்டி வந்துள்ளனர்,
இது தொடர்பாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டை வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர் மேலும் இதுகுறித்து அதிகாரியிடம் கேட்டால் தங்களை மிரட்டுவதாகவும்,எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் எனக்கு பயம் இல்லை என்றும் மானம் மரியாதை கெடுத்து விடுவோம் என மிரட்டல் விடுப்பதாக முதியவர்கள் வேதனை தெரிவித்தனர்,
அதிகாரிகள் லஞ்சத்தை பெற்றுக் கொண்டு வேறு ஒரு நபரை அந்த வீட்டில் குடியமர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகள் முழுவதும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது , தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டை கேட்டு செல்லும் முதியவர்களுக்கு
அதிகாரிகளின் பொறுப்பற்ற பதிலால் முதியவர்கள் ஆயிரக்கணக்கில் பணத்தை செலவு செய்து உடுமலைப்பேட்டையில் இருந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு வழங்கியும் அவர்களுக்கு இதுவரை தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்தனர்,
முறைப்படி குழுக்கள் மூலம் தேர்வு செய்து உடுமலை புக்குளம் கிராமத்தில் முதியவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டை வழங்கிட வேண்டுமென திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் கண்ணீர் மல்க ஆட்சியரிடம் முதியவர்கள் மனு வழங்கினர்.