கலைத்திருவிழா போட்டிகள்... அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி அசத்தல்!
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டாரம் பெரியாயிபாளையம் குறுவள மைய அளவில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "பசுமையும், பாரம்பரியமும்" என்ற தலைப்பில் கலைத்திருவிழா போட்டிகள் அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
கலைத்திருவிழா போட்டி நிகழ்ச்சிக்கு அவிநாசி வட்டார கல்வி அலுவலர் திருநாவுக்கரசு தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
போட்டியில் 13 பள்ளிகளை சேர்ந்த 320 மாணவ, மாணவிகள் தனி மற்றும் குழு என 18 வகையான போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டிகளில் அனைத்து பள்ளி மாணவர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்தியதால் போட்டி கடுமையாக இருந்ததுடன், மதிப்பெண்கள் போட நடுவர்களை திணறினர். மாலையில் கலைத்திருவிழா போட்டிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இதில் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த தமிழ் ஒப்புவித்தல் போட்டியில் அம்மாபாளையம் பள்ளி மாணவி அபூர்வாஸ்ரீ முதலிடத்தையும், தேவம்பாளையம் பள்ளி மாணவர் திருவாசகம் 2ஆம் இடத்தையும், அவினாசிலிங்கம்பாளையம் பள்ளி மாணவி கிருத்திஹாசினி 3 ஆம் இடமும் பிடித்தனர்.
கதை கூறுதல் போட்டியில் ஆயிக்கவுண்டன்பாளையம் பள்ளி மாணவர் பூபேஷ் முதலிடம், அம்மாபாளையம் பள்ளி மாணவி சாஜிரா 2 ஆம் இடம், அணைப்புதூர் பள்ளி மாணவி ஸ்ரீ ஹர்ஷிதா 3 ஆம் இடமும் பிடித்தனர். வண்ணம் தீட்டுதலில் பெரியாயிபாளையம் பள்ளி மாணவர் ஜீவா முதலிடம், பச்சாம்பாளையம் பள்ளி மாணவி விகாஷினி 2 ஆம் இடம், அவினாசிலிங்கம்பாளையம் பள்ளி மாணவி யாழினி 3 ஆம் இடமும் பிடித்தனர்.
ஆங்கிலம் ஒப்புவித்தல் போட்டியில் ராக்கியாபாளையம் பள்ளி மாணவி ஸ்ரீரக்ஷா முதலிடம், அவினாசிலிங்கம்பாளையம் பள்ளி மாணவர் கோகுல் 2 ஆம் இடம், குப்பாண்டம்பாளையம் பள்ளி மாணவி சஹானா 3 ஆம் இடமும் பிடித்தனர்.
மாறுவேடப்போட்டியில் அவினாசிலிங்கம்பாளையம் பள்ளி மாணவி கவிஷா முதலிடம், ராக்கியாபாளையம் பள்ளி மாணவர் சக்திவேல் 2 ஆம் இடம், பெரியாயிபாளையம் பள்ளி மாணவி ஜஸ்ரிதா 3 ஆம் இடமும் பிடித்தனர்.
களிமண் பொம்மை செய்தல் போட்டியில் அவினாசிலிங்கம்பாளையம் பள்ளி மாணவர் லெளனேஷ் முதலிடம், பெரியாயிபாளையம் பள்ளி மாணவி பவித்ரா 2 ஆம் இடம், ஆயிக்கவுண்டன்பாளையம் பள்ளி மாணவி அஷ்வானா 3 ஆம் இடமும் பெற்றனர்.
அதேபோல் 3 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த பேச்சு போட்டியில் அம்மாபாளையம் பள்ளி மாணவி லக்ஷனா முதலிடம், அவினாசிலிங்கம்பாளையம் பள்ளி மாணவி சுபிக்ஷா 2 ஆம் இடம், அணைப்புதூர் பள்ளி மாணவி விந்திகா 3 ஆம் இடமும் பெற்றனர்.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் அம்மாபாளையம் பள்ளி மாணவி பூவிதாஸ்ரீ முதலிடம், பெரியாயிபாளையம் பள்ளி மாணவர் முகில் 2 ஆம் இடம், திருமுருகன்பூண்டி பள்ளி மாணவி மந்த்ரா 3 ஆம் இடமும் பெற்றனர்.
மெல்லிசை தனிப்பாடலில் அம்மாபாளையம் பள்ளி மாணவி ராமலட்சுமி முதலிடம், அவினாசிலிங்கம்பாளையம் பள்ளி மாணவி தீக்ஷா 2 ஆம் இடம், திருமுருகன்பூண்டி பள்ளி மாணவர் நிவிஷ் 3 ஆம் இடமும் பெற்றனர்.
தேசபக்தி பாடலில் அம்மாபாளையம் பள்ளி மாணவர் அகிலேஸ்வரன் முதலிடம், பெரியாயிபாளையம் பள்ளி மாணவர் கவின் 2 ஆம் இடம், தேவம்பாளையம் பள்ளி மாணவர் சுதீஷ் 3 ஆம் இடமும் பெற்றனர்.
களிமண் பொம்மை செய்தலில் திருமுருகன்பூண்டி பள்ளி மாணவி புகழ்மதி முதலிடம், துலுக்கமுத்தூர் பள்ளி மாணவர் சஞ்சய் 2 ஆம் இடம், குப்பாண்டாம்பாளையம் பள்ளி மாணவர் மனோஜ்குமார் 3 ஆம் இடமும் பெற்றனர்.
மாறுவேடப்போட்டியில் அம்மாபாளையம் பள்ளி மாணவி ஜிதிகாஸ்ரீ முதலிடம், ராக்கியாபாளையம் பள்ளி மாணவர் திஷாந்த் 2 ஆம் இடம், பச்சாம்பாளையம் பள்ளி மாணவர் ஹரிஷ்வா 3 ஆம் இடமும் பெற்றனர்.
மேலும், நாட்டுப்புற நடனம் தனி போட்டியில் அம்மாபாளையம் பள்ளி மாணவி தன்யஸ்ரீ முதலிடம், பச்சாம்பாளையம் பள்ளி மாணவி தேவசேனா 2 ஆம் இடம், அவினாசிலிங்கம்பாளையம் பள்ளி மாணவி ரித்திகா 3 ஆம் இடமும் பெற்றனர்.
நாட்டுப்புற நடனம் குழு போட்டியில் அம்மாபாளையம் பள்ளி மண்ணின் நாட்டுப்புற குழுவினர் முதலிடம், தேவம்பாளையம் பள்ளி பி குழுவினர் 2 ஆம் இடம், அவினாசிலிங்கம்பாளையம் பள்ளி ஏ.வி.எல்.பி நாட்டுப்புற குழுவினர் 3 ஆம் இடமும் பெற்றனர். பரதநாட்டியம் தனி போட்டியில் அம்மாபாளையம் பள்ளி மாணவி தெளஹிதா முதலிடம், தேவம்பாளையம் பள்ளி மாணவி அனுஷா 2 ஆம் இடம், புதுஊஞ்சப்பாளையம் பள்ளி மாணவி கோகுல ஸ்ரீ 3 ஆம் இடமும் பெற்றனர்.
பரதநாட்டியம் குழு போட்டியில் அம்மாபாளையம் பள்ளி கொஞ்சும் சலங்கை குழுவினர் முதலிடம், அவினாசிலிங்கம்பாளையம் பள்ளி ஏ.வி.எல்.பி பரதநாட்டிய குழுவினர் 2 ஆம் இடம், ராக்கியாபாளையம் பள்ளி சலங்கை ஒலி குழுவினர் 3 ஆம் இடமும் பெற்றனர்.ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதலில் கணியாம்பூண்டி பள்ளி மாணவி மிதுளா முதலிடம், அவினாசிலிங்கம்பாளையம் பள்ளி மாணவர் முகிலேஷ் 2 ஆம் இடம், அணைப்புதூர் பள்ளி மாணவர் கார்த்திகேயன் 3 ஆம் இடமும் பெற்றனர்.
தனிநபர் நடிப்பில் அம்மாபாளையம் பள்ளி மாணவி தன்ஷிகா முதலிடம், அவினாசிலிங்கம்பாளையம் பள்ளி மாணவர் சர்வித் 2 ஆம் இடமும் பெற்றனர்.
போட்டியில் திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 12 போட்டிகளில் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருப்பூர் திருமுருகன் பூண்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் சுந்தரம், பழனிசாமி, சக்கரபாணி ஆகியோர் கேடயம் பரிசுகளை வழங்கினர்.



.jpeg)
