தீரன் சின்னமலை கல்லூரியில் இலவச மகளிர் நல மருத்துவ முகாம்
தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கம் திருப்பூர் வஞ்சிபாளையம் ரோட்டரி சங்கம் மற்றும் திருப்பூர் மேற்கு ரோட்டரி மக்கள் மருத்துவமனை சார்பில் இலவச மகளிர் நல மருத்துவ முகாம் வஞ்சி பாளையத்தில் உள்ள தீரன் சின்னமலை மகளிர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
மருத்துவ முகாமிற்கு கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் ரேச்சல் நான்சி ஃபிலிப் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் மோகன சவுந்தரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கொங்கு வேளாளர் அறக்கட்டளையின் துணைத் தலைவர் பி வி எஸ் பி. முருகசாமி மருத்துவ முகாமை தொடக்கி வைத்தார்.
முகாமில் 800 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு பொது மருத்துவம், கண், பல், குழந்தைகள் மற்றும் பெண்கள் நலம் மற்றும் சர்க்கரை நோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருந்துகளும் வழங்கப்பட்டது.
முகாமில் ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் லோகநாதன், மண்டல ஒருங்கிணைப்பாளர் குமார செந்தில் ராஜா, ரோட்டரி உதவி ஆளுநரும், திருப்பூர் மேற்கு ரோட்டரி மக்கள் மருத்துவமனை தலைவருமான சண்முகசுந்தரம், திருப்பூர் மேற்கு ரோட்டரி தலைவர் ஆறுமுகன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் செந்தில் பிரபு, திருப்பூர் வஞ்சிபாளையம் ரோட்டரி சங்கத் தலைவர் சதாசிவம், செயலாளர் பரத்ராஜ், பொருளாளர் ரேகா மகேஷ்குமார் உள்பட ரோட்டரி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.