"திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு மாற்றாக வேறு எந்த திட்டத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது" - கோவில்பட்டியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிமாநில பொதுச் செயலாளர் மயில் பேட்டி


கோவில்பட்டியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோவில்பட்டி வட்டாரத்தில் பணி ஓய்வு பெற்ற 25 ஆசிரியர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வட்டாரத் தலைவர் .மணிமொழி நங்கை தலைமை வகித்தார்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில் சிறப்புரையாற்றி, பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கவுரவித்து, நினைவு பரிசுகளை வழங்கினார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில் செய்தியாளர்களிடம் பேசுகையில்:- 

"திமுக ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சொல்லப்பட்ட எந்த தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. இதற்காக  அமைப்புகளுடன்  இணைந்து போரட்டங்களை நடத்தி வருகிறோம்.  அரசு பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை மீண்டும வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. கடந்த 18-ம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை  நிறைவேற்றவில்லை என்பதால் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, உடனடியாக எங்களது கோரிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும். 

தற்போது அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் பழைய ஓய்வூயத்தை அமல்படுத்த வலியுறுத்தி உள்ளோம். அவர்கள் எங்கள் சங்கங்களை அழைத்து கருத்துக்களை கேட்டுள்ளனர். அந்த குழுவின் அறிக்கை பெற்று, திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு மாற்றாக வேறு எந்த திட்டத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற கோபம் இருக்கிறது.

கடந்த 12 ஆண்டுகளாக தொடக்கக்கல்வித்துறையில் ஒரு நிரந்தர ஆசிரியர் கூட நியமிக்கவில்லை. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு 2430 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அரசின் புள்ளி விபரப்படி 5500 காலிப்பணியிடங்களை மாவட்டம் வாரியாக உள்ளன. அதில் 2430 மட்டும் தான் நிரப்பப்பட்டுள்ளன. அதனால் மீதமுள்ள 3000 பணியிடங்களை நிரப்ப வேண்டும். அப்போது தான் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் உயரும். திமுக அரசு அளித்த முக்கியமான வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஊதிய முரண்பாடுகளை களைவோம் என்றனர். அதனை இதுவரை நிறைவேற்ற வில்லை. இன்னும் உள்ள 5 மாதங்களில் எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித்தர வேண்டும் என்றார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!