ஒன்னரை லட்சம் ரூபாயை தொலைத்த முதியவர்... போலீசில் ஒப்படைத்த தந்தை, மகளுக்கு பாராட்டு!

 காங்கேயத்தில் ரூ.1.5 லட்சம் பணத்தை தவறவிட்ட முதியவர் - கீழே கிடந்து எடுத்த தந்தை மகள் காங்கேயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து பின்னர் உரியவரிடம் வழங்கினார். 

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் விபத்து காப்பீட்டு பணத்தை ஞாபக மறதியால் தவறவிட்ட முதியவர். கீழே கிடந்த எடுத்த தந்தை மற்றும் மகள் உறவினரின் அறிவுறுத்தலின் காங்கேயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் தவறவிட்ட முதியவரிடம் ஒப்படைத்தனர். நேர்மையாக காவல் நிலையத்தில் பணத்தை ஒப்படைத்த தந்தை மகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

காங்கேயத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் குங்காருபாளையம் காமராஜ்(58) என்ற முதியவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த வழக்கானது காங்கேயம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டு முதியவர் காமராஜுக்கு ரூ.3.68 ரூபாய் இழப்பீடு கடந்த வாரத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று காங்கேயம் வந்த முதியவர் காமராஜ் அந்த பணத்தை வங்கியில் இருந்து எடுத்துக் கொண்டு வழக்கை நடத்தி கொடுத்த வழக்கறிஞர் மற்றும் காமராஜின் மகன் ஆகியோர்களுக்கு பணத்தை பிரித்துக் கொடுத்துவிட்டு மீதி தொகை ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஆதார் கார்டு மற்றும் வங்கி பாஸ் புக் ஆகியவற்றை ஒரு பையில் வைத்து பேக்கரிக்கு சென்ற இடத்தில்  நியாபக மறதியில்  தவறவிட்ட சென்றுவிட்டார். இன்று அந்த பேக்கரிக்கு டீ குடிக்க சென்ற கலிமேடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி செல்வராஜ் மற்றும் அவரது மகள் திவ்யா கீழே ஒரு மஞ்சள் பை கிடப்பதை பார்த்து எடுத்துள்ளனர். திறந்து பார்த்தால் அதில் பணம் இருந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் செல்வராஜின் மருமகனும் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலருமான  முருகனிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் அவரின் அறிவுறுத்தலின் படி காங்கேயம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செல்வநாயகம் மற்றும் உதவி ஆய்வாளர் கபில்தேவிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பையில் இருந்த பணம் மற்றும் ஆதார் கார்டு மற்றும் வங்கி பாஸ் புக் ஆகியவற்றை தவறவிட்ட முதியவர் காமராஜை உறவினர்களுடன் வரவழைத்து ஒப்படைத்தனர். கீழே கிடந்து எடுக்கப்பட்ட பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தந்தை செல்வராஜ் மற்றும் மகள் வித்யா ஆகியோர்களுக்கு காவல்துறை சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த சம்பவம் குறித்து காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தந்தை மகளை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி