தவெக விஜய் சுற்றுப்பயணம் வேலைக்கு ஆகாது... திருப்பூரில் நைனார் நாகேந்திரன் பேட்டி

 திருப்பூர்: தவெக விஜய் சுற்றுப்பயணம் வேலைக்கு ஆகாது. எங்கள் கூட்டணி பலமாக உள்ளது என்று திருப்பூரில் நைனார் நாகேந்திரன்  கூறினார்.

திருப்பூர் பாளையக்காடு பகுதியில் பாஜக மாவட்ட செயலாளர் கார்த்திக் ஏற்பாட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு, பெண்களுக்கு சேலை, மஞ்சள் குங்குமம் வழங்கும் நிகழ்வில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று பெண்களுக்கு ,சேலை குங்குமம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சீனிவாசன், நிர்வாகிகள் செந்தில் வேல், பாயின்ட் மணி, சின்னசாமி, நடராஜ், மலர்க்கொடி, சேலஞ்சர் துரை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்து மதத்தை பொறுத்து நம்முடைய தந்தையாக சிவன் பார்வதியை வணங்கினால் கூட முழு முதல்கடவுலாக விநாயகரை வணங்குகிறோம். 

தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடி வருகிறோம்.

தமிழக முதல்வர் வெளிநாடு சென்று முதலீடு பெற்ற விவரங்களை வெள்ளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.


ஏற்றுமதி கொள்கையில் மாற்றம் வர வேண்டும் என்று முதல்வர் கூறியதாக சொல்கிறார்கள். எந்த மாதிரியான மாற்றம் என்று அவர் சொல்ல வேண்டும். 


ஏற்றுமதி வரி விதிப்பு சர்வதேச பிரச்சினை. டிரம்ப் விதித்த வரியில் அவர்களுக்கும் பாதிப்பு உள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு இருக்கிறது. இது குறித்து ஏற்றுமதியாளர்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வேலை நிறுத்தாத அளவுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று சொல்லி இருக்கிறார். 

அந்நிய நாட்டாள் நம் நாட்டுக்கு பிரச்சினை வரும்போது எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியுடன் சேர்ந்து நிற்க வேண்டும். எதிரி நாட்டுடன் சேர்ந்து கொண்டு குளிர் காயக்கூடாது. 

மனுக்கள் ஆற்றில் வீசப்பட்டது குறித்த கேள்விக்கு, முதல்வர் மனுக்கள் முதல்வர் வாங்கினால் அது குப்பையில் போடப்படுவது தான் திராவிட மாடல். 

இன்னொரு கவுன்சிலர் எம்.எல். ஏ கூட ஆகாமல் விஜய் எல்லோரையும் தோற்கடிப்போம் என்று சொல்வது வேடிக்கை. தவெக விஜய் சுற்றுப்பயணம் வேலைக்கு ஆகாது. எந்த சுற்று பயணமும் தேசிய ஜனநாயக கூட்டணியை ஒன்றும் செய்ய முடியாது.

கோவையை விட திருப்பூரில் 16 சதவீதம் அதிகம் சொத்துவரி உயர்வு 300 சதவீதத்துக்கும் அதிகம். முதல்வர் என்ன செய்திருக்க வேணும். ஏற்றுமதியாளர்களுக்கு சொத்து வரி கிடையாது, மின் கட்டணம் குறைக்க வேண்டும். அதை விடுத்து போராட்டம் நடத்தப்போவதாக சொல்கிறார். என்று கூறினார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!