சாலையைக் கடக்க முயன்ற சிறுமி லாரியில் சிக்கி உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரைப்புதூர் பகுதியில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த சூரத் என்பவரது 6 வயது மகள் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தார்.
சிறுமி திடீரென சாலையை கடக்க முயன்ற போது சாலையில் வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி சிறுமி மீது மோதி ஏறி இறங்கியது இதில் சிறுமி உடல் நசுங்கி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சிறுமியின் உறவினர்கள் லாரி என் கண்ணாடிகளை உடைத்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பல்லடம் போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து பொதுமக்களை கலைத்தனர். இதனைத் தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் தங்கராஜ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.