திருப்பூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்... பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்பு
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, காங்கயம், சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட, எம்.ஜி.ஆர் மன்றம், அம்மா பேரவை புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம், வருகிற 11,12 தேதிகளில் திருப்பூர் வருகை தர உள்ள க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திருப்பூர் மாநகர் எம்.ஜி.ஆர். இளைஞரணி, மகளிரணி சார்பாக சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக திருப்பூர் மாநகர் மாவட்ட கழக அலுவலகமான அம்மா மாளிகையில் நடைபெற்றது.
திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார் திருப்பூர் மாநகர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் வருகை தர உள்ள கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களுக்கு எவ்வாறு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டுமென ஆலோசனை வழங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வேல்குமார் சாமிநாதன்,மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுந்தராம்பாள் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
இந்நிகழ்வில், காங்கயம் ஒன்றிய கழகச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான என்.எஸ்.என்.நடராஜ், மாவட்ட கழக அவைத் தலைவர் வெ.பழனிச்சாமி, கழக நிர்வாகிகள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், பட்டுலிங்கம், சங்கீதா சந்திரசேகர், பூலுவபட்டி பாலு, லட்சுமி, தம்பி மனோகரன், கேசவன்,பி.கே.எம்.முத்து, ஏ.எஸ்.. கண்ணன், ஹரிஹரசுதன்,வி.பி.என்.குமார், நாச்சிமுத்து, கனகராஜ், தங்கராஜ், சிவளா தினேஷ், சண்முகசுந்தரம், சிட்டி பழனிச்சாமி, அட்லஸ் லோகநாதன், கண்ணபிரான், வக்கீல் முருகேசன், எஸ்.பி.என். பழனிச்சாமி, ஏ.எம்.சதிஷ், கலைமகள் கோபால்சாமி, தம்பி மைதீன், ரத்தினகுமார், சாமி கணேஷ் , யுவராஜ் சரவணன், ஆண்டவர் பழனிசாமி, பிரேம்குமார் , சரவணன், குணசேகரன், சிலம்பரசன், சரஸ்வதி, பாரதிப்பிரியன், வெள்ளியங்கிரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
