பல்லடத்தில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் கோலாகலம்!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரம் மற்றும் ஒன்றிய சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடந்தது.
இந்து முன்னணி மேற்கு மாவட்ட செயலாளர் சர்வேஸ்வரன் தலைமையில் மாநில செயலாளர் சண்முகம் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் ஆரம்பித்து திருச்சி சாலை மேற்கு பல்லடம் அண்ணா நகர் வழியாக மாணிக்கபுரம் சாலை வழியாக மங்களம் சாலை வந்து பொங்கலூர் பிஏபி வாய்க்காலில் கரைப்பதற்கான ஊர்வலம் தற்போது நடைபெற்று வருகிறது.
ஏராளமான பொதுமக்கள் கண்டு சாமிதரிசனம் செய்தனர். ஊர்வலம் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். ஊர்வலத்தில் கோலாகலமாக நடனங்களும் விதவித விநாயகர் சிலைகளும் வருவதால் பல்லடம் நகரமே திருவிழா கோலம் பூண்டது.
இந்து முன்னணி நிர்வாகிகள் உதயகுமார், ரஞ்சித், லோகநாதன்,உள்ளிட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.