திருமுருகன்பூண்டி நகராட்சியில் கவுன்சிலர்கள் தர்ணா
பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் செய்வதாக கூறி திருமுருகன்பூண்டி அனைத்து கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமுருகன்பூண்டியில் திமுக வார்டுகளை தவிர பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் செய்வதைக், கண்டித்து கூட்டத்தில் அனைத்து கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமுருகன்பூண்டி நகர்மன்றக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு நகர்மன்றத் தலைவர் ந.குமார் தலைமை வகித்தார்.
இதில் பங்கேற்ற, நகர் மன்ற உறுப்பினர், குடிநீர் வசதி, சாக்கடைக் கால்வாய், சாலை வசதி, பொதுக்கழிப்பிடம் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதில், திருமுருகன்பூண்டி நகராட்சிக்குள்பட்ட 27 வார்டுகளில் திமுகவை சேர்ந்த 8 வார்டுகளுக்கு மட்டும் ஒரு ஒரு கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் பொது நிதியிலிருந்து பணிகள் செய்ததற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மன்ற கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டது. இதற்கு, அதிமுக வை சேர்ந்த 8 பேர் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யை சேர்ந்த 2 பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 6 பேர் என 16 நகர்மன்ற கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு தீர்மானத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருமுருகன் பூண்டியில் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நகர மன்ற தலைவர் பேச்சுவார்த்தைக்கு பின்பு கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
இது குறித்து நகராட்சி மன்ற தலைவர் குமார் தெரிவிக்கையில் தற்போது வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு 16 நகர மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அனைத்து வார்டுகளுக்கும் 10 லட்சம் வீதம் பணி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார் இதனைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.