தூத்துக்குடியில் ஆண் பெண் இருபாலரும் கலந்து கொண்ட மினி மரத்தான் போட்டி மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்.
தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூாியின் பொன்விழாவை முன்னிட்டு கடற்கரை சாலை தனியாா் ஹோட்டல் முன்பிருந்து படகு குழாம் வரை ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூாி, தமிழ்நாடு மொ்க்ன்டைல் வங்கி இணைந்து நடத்திய 5 கிலோமீட்டா் தூரம் ஆண் பெண் இருபாலரும் கலந்து கொண்ட மினி மாரத்தான் பேட்டியை மேயா் ஜெகன் பொியசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். போட்டியில் ஆண் பெண் என 250 மாணவ மாணவியா்கள் கலந்து கொண்டனா். அதில் ஆண்கள் பிாிவில் 50 பேருக்கும் பெண்கள் பிாிவில் 50 பேருக்கும் மரக்கன்றுகளை மேயர் ஜெகன் பொியசாமி வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில்:- ஓவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் ஆரோக்கியம் அவசியமாகிறது. அதே சமயத்தில் உடற்பயிற்சி நடைபயிற்சி ஓட்டபந்தயம் முக்கியம். இந்த மாநகரம் சுகாதாரமான நகரமாக மாறுவதற்கு நெகிழி கோிபேக், பிளாஸ்டிக் பை, கப் உள்ளிட்ட 28 வகையான பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என்று மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் எல்லோருக்கும் தொிவிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தக்கூடாது என்று உங்களது தாய் தந்தையா்களிடம் கூறுவது மட்டுமின்றி நீங்களும் முன் உதாரணமாக இருந்து அதை பயன்படுத்த மாட்டோம் என்று சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று பேசினாா்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு செப் 20ம் தேதி கல்லூாி பொன்விழாவில் பாிசுகள் வழங்கப்படும்.
விழாவில் கல்லூாி முதல்வா் ரூபா, மேன்மையாளர் பாத்திமாலூயிஸ், துணை முதல்வா் மதுரவள்ளி, மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளா் மயிலேறும் பெருமாள், பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டாா். கல்லூாி ஆசிாியா்கள் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனா்.
செய்தியாளர்: அஹமத்

