திருப்பூரில் நான் முதல்வன் திட்ட வழிகாட்டுதல் முகாம்... கலெக்டர் மணீஷ் நாரனவரே தொடங்கி வைத்தார்.

 திருப்பூரில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி உயர்கல்வி வழிகாட்டுதல் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்.மனீஷ் நாரனவரே துவக்கி வைத்தார்.

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியினை திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர்.மனீஷ் நாரனவரே  கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய அவர் , தமிழகத்தின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் வகையிலும் போட்டி தேர்வுகளை எளிதாக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் 2022 ஆம் ஆண்டு முதல் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.என்றும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியில் சேரும் வகையில் கல்லூரி கனவு,உயர்கல்வி ஆலோசனை முகாம் , கல்விக்கடன் முகாம்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது.என்றும் மேலும் மாணவ மாணவியர்களுக்கு புதுமைப்பெண் , தமிழ் புதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் 97 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றது. இந்த ஆண்டு தற்போது வரை 94 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேர்ந்துள்ள நிலையில் மீதமுள்ள 6 சதவீதம் பேரை கண்டறிந்து அவர்களை உயர் கல்வியில் சேர்க்கும் வகையில் 2 கட்டமாக மூன்று சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. தற்போது மத்திய மாநில அரசுகளின் பணிகளுக்காக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.என்றும் இதில் ஒரு சில தேர்வுகளுக்கு மட்டும் 8,10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதுமானது.ஆனால் மற்ற தேர்வுகளுக்கு உயர் கல்வி என்பது கட்டாயமாக உள்ளது. எனவே 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கட்டாயம்  தங்களுக்கு விருப்பமான உயர்கல்வினை தேர்ந்தெடுக்க வேண்டும். 10வது முடித்திருந்தாலும் கூட ஐடிஐ உள்ளிட்ட 3 வருட படிப்புகளை தேர்ந்தெடுத்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழக அரசின் முன்னோடி திட்டமான இதன் மூலம் மாணவர்கள் பயன்பெற வேண்டும் என பேசினார். தொடர்ந்து மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த கையேடு வழங்கப்பட்டது. இந்த முகாமில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு துறை சார்ந்த ஆலோசனைகளை வழங்கினர். மேலும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கல்வி கடன் ஆலோசனை வழங்குவதற்கான முகாமும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிமுத்து , திருப்பூர் கோட்டாட்சியர் மோகனசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி