தேவராயன் பள்ளியில் சர்வதேச விளையாட்டு நாள் கொண்டாட்டம்
திருப்பூர் மாவட்டம் தேவராயன் பள்ளியில் சர்வதேச விளையாட்டு நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி, பெருமாநல்லூர் தேவராயன் CBSE பள்ளி மாணவர்கள் சர்வதேச விளையாட்டு தினத்தை பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகளோடு கொண்டாடினர்.
இது குறித்து பள்ளியின் முதல்வர் பாலமுருகன் கூறியதாவது: வளர்ந்து வரும் நாகரீக உலகில் இளைய தலைமுறையினர் மறந்து வரும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் விதமாக எமது பள்ளி மாணவர்கள் இவ்விழாவை கொண்டாடினர். இன்றைய தினம் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, நொண்டி, தாயம், பம்பரம், டயர் ஓட்டுதல், கயிறு தாண்டுதல், கல் விளையாட்டு, கிட்டிப்புள், கோலி குண்டு, சாக்கு ஓட்டம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் மழலையர் வகுப்பு முதல் அனைத்து வகுப்பு மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று புதிய வகை விளையாட்டுகளை கற்றுக் கொண்ட அனுபவத்தினை மாணவர்கள் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி அளித்ததாக அவர் கூறினார். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு.சிவானந்தம் மாணவர்களுக்கு இவ்விளையாட்டுகளுக்கான பயிற்சிகள் அளித்து மேலும் போட்டிகளுக்கான விதிமுறைகளையும் தெளிவுபடுத்தினார்.
ஆசிரியர் திரு.பிரதீப் ஒருங்கிணைத்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். மேலும் பள்ளியின் தாளாளர், தி சென்னை சில்க்ஸ் இன் உரிமையாளர் திரு.ஆறுமுகம், பள்ளியின் நிர்வாக உறுப்பினர்கள் திரு. பிரசன்னா அங்குராஜ் மற்றும் திரு.கண்ணபிரான் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
