தூத்துக்குடியில் நடைபெற்ற மின்னொளி கபடி போட்டிைய அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தாா்.

 

தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் கபடி கழகத்தின் ஆதரவுடன் சண்முகபுரம் கபடி கிளப் மற்றும் தாமோதரன்நகா் சந்தனமாாியம்மன் கோவில் இளஞைர் அணி நண்பா் குழு இணைந்து முருகேசன் நாடாா் நினைவு கோப்பைக்கான முதலாம் ஆண்டு மாநில அளவிலான கல்லூாி மாணவ மாணவிகளுக்கான ஆண் பெண் மின்னொளி கபடி போட்டி  நடைபெறுகிறது.

சந்தனமாாியம்மன் கோவில் மைதானத்தில் நடைபெற்ற கபடி போட்டிக்கு விஜயராகவன் தலைமை வகித்தாா். கபடி கந்தன், கருணாகரன், முத்து கணேஷ்குமாா், சங்கரேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சண்முகராஜ் வரவேற்றாா்.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கபடி போட்டியை தொடங்கி வைத்தாா். முதல்போட்டியில் லயோலா அணியை வீழ்த்தி சேரன் அணி வெற்றி வெற்றது. இன்று நடைபெறும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பாிசுகள் வழங்கப்படுகிறது. 

நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ெசந்தில்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனா். கபடி போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அா்ஜுனா விருது பெற்ற மணத்தி கணேசன், அமெச்சூா் கபடி கழக இணைச்செயலாளர் கபடி கந்தன் ஆகியோர் செய்திருந்தனா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!