கடைசி பெஞ்சு நோ - first பெஞ்ச்க்கு வா என அழைத்த ஆசிரியர் - தாமதப்படுத்திய மாணவனை மூங்கில் பிரம்பு கம்பால் வெளுத்து வாங்கிய ஆங்கில ஆசிரியர்-ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு


காயமடைந்த மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி - 2 பிரிவுகளில் ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு -கோவில்பட்டியில் பரபரப்பு

கோவில்பட்டி  அத்தைக்கொண்டானில் செயல்பட்டு வரும் லட்சுமி சீனிவாசா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் கோவில்பட்டி நடராஜபுரம்  தெரு பகுதியை சேர்ந்த மாணவர்  12ம் வகுப்பு வணிகவியல் பாட பிரிவில் படித்து வந்துள்ளார். நேற்று ஆங்கில வகுப்பின் போது அப்பள்ளி ஆங்கில ஆசிரியர் வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த சங்கிலி பாண்டி என்பவர் மூங்கில் பிரம்பு கம்பால் மாணவரை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் வலது கை மணிக்கட்டு மேல் பகுதி, வலது , இடது முழங்கை பகுதியில் மாணவரகளுக்கு  காயம் ஏற்பட்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் மாணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் சங்கிலி பாண்டியன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 

ஆங்கில வகுப்பின் போது கடைசி பெஞ்சில் அமர்ந்து இருந்த மாணவர் அருகில் இருந்த மாணவருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் அவரை முன் மேசைக்கு ஆசிரியர் சங்கிலி பாண்டி வரச் சொன்னபோது வராமல் கால தாமதம் செய்ததால் ஆத்திரத்தில் மூங்கில் பிரம்பு கம்பால் மாணவனை ஆசிரியர் அடித்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி