தூத்துக்குடி: மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் 437 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது - ஆட்சியர் இளம்பகவத் தகவல்.!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (29.09.2025) நடைபெற்றது.
பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 437 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 42 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, திங்கள் கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக கால்கள் பாதிக்கப்பட்ட 07 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்களை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்.
மேலும், செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தினம் செப்டம்பர் 23 அன்று சிறப்பிக்கப்படுகிறது. சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் சைகை மொழி வாரத்தை இவ்வருடம் 23.09.2025 முதல் 29.09.2025 வரை கடைபிடிக்கப்படுகிறது.
அரசு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் செவித்திறன் பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை மற்றம் அன்றாட தேவைகளை புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான சைகை மொழி கற்றுக் கொள்ளுதல் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், முன்னிலையில் மாற்றுத்திறனாளி நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நல்லாயன் காது கேளாதோர் சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக, இன்றையதினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாரத ஸ்டேட் வங்கி மூலம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட EV – Ambulance வாகனத்தை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பயன்பாட்டிற்கு வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் தமிழரசி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


