தூத்துக்குடி அகிலாண்டபுரம் ஸ்ரீ செங்கமலம் ராஜகோபாலன் அறக்கட்டளை மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்திய இயற்கை விவசாயிகள் கருத்துத்தரங்கம்,
தூத்துக்குடி அகிலாண்டபுரம் ஸ்ரீ செங்கமலம் ராஜகோபாலன் அறக்கட்டளை மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்திய இயற்கை விவசாயிகள் கருத்துத்தரங்கம், இலவச மருத்துவ முகாம் ஆகியவை பாஞ்சாலங்குறிச்சியை அடுத்த அகிலாண்டபுரத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அகில பாரத துறவிகள் சங்க துணைத் தலைவர் செண்டலங்கார செண்பகமன்னார் இராமானுஜ ஜீயர் அவர்கள் தலைமை தாங்கினார். தூத்துக்குடி வானொலி நிலையத்தின் முன்னாள் நிகழ்ச்சி தலைவர் முனைவர் எம் ராதாகிருஷ்ணன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிறைவாக சண்முகமல்லுச்சாமி அவர்கள் நன்றி கூறினார்.
