கரூர்:விஜய் பேரணியில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த சீன அரசு.!
கரூர் :விஜய் பேரணியில் 41 பேர் உயிரிழந்த சோகம் குறித்து சீனா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் "பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம், எங்கள் இதயத்திலிருந்து அவர்களது குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார். மேலும் இந்தியாவில் உள்ள சீன தூதரகம் தனது அனுதாபத்தையும் இரங்கலையும் வெளிப்படுத்தியதாக அவர் கூறினார், மேலும் கூட்ட நெரிசலில் சீன நாட்டினர் யாரும் இறந்ததாகவோ, காயமடைந்ததாகவோ எந்த தகவலும் இல்லை என்றும் கூறினார்.
