"கரூரில் ஏற்பட்ட துயரத்திற்கு அடிப்படை காரணமே விஜயின் பொறுப்பற்ற அரசியல்தான்" - ஆளூர் ஷா நவாஸ், விசிக துணை பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு
விஜய்க்கு கூடும் அதிக கூட்டத்தை முறைப்படுத்தவே காவல்துறையும் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதை அரசியல் பழிவாங்கலாக சித்தரித்தார் விஜய். அவருக்கு ஆதரவாக பேசும் மூத்த பத்திரிகையாளர்களும் கூட, கட்டுப்பாடுகளை விஜய் மீற வேண்டும் என்று உசுப்பிவிட்டனர். எனவே, விஜய் தொண்டர்களிடம் போலீஸ் கட்டுப்பாடுகள் மீது எதிர்மறை எண்ணம் வலுத்து, அவற்றை அவர்கள் பின்பற்றாத நிலையும் உருவானது" என விசிக துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் குற்றசாட்டு
