"இது தலைமைத்துவமல்ல, கோழைத்தனம்! தன்னை சந்திக்கத் திரண்டவர்களின் துயரத்தில் பங்கெடுக்காமல் வெளியேறியது அதிர்ச்சியளிக்கிறது" - திருமுருகன் காந்தி கண்டனம்.
த.வெ.க கூட்ட நெரிசலில் பலியான அப்பாவி மக்களின் துயரம் நம்மை உலுக்குகிறது. ஒரு தலைவராக விஜய் தன்னை சந்திக்கத் திரண்டவர்களின் துயரத்தில் பங்கெடுக்காமல் வெளியேறியது அதிர்ச்சியளிக்கிறது.
மக்களோடு அவர் களத்தில் நின்றிருக்க வேண்டும். மருத்துவப்பணிகள், நிவாரணப்பணிகள் என அனைத்தையும் முன்னின்று கவனித்து தமது தொண்டர்களின் இன்னல்களில், துயரத்தில் பங்கெடுக்கும் பொறுப்பு அவருக்குண்டு.
அரசியல் கூட்டங்களில் 30க்கும் மேற்பட்டோர் பலியாவதென்பது தமிழ்நாட்டில் நாம் காணாத பெருந்துயர்.
எட்டு பச்சிளம் குழந்தைகள் பலியான செய்தியறிந்த பின்னரும் எப்படி ஒரு தலைவனால் வெளியேற முடிந்தது?
தன்னை நேசித்தவர்கள் பலியானதை அறிந்தும் அம்மக்களை விட்டு எப்படி ஒரு தலைவன் விலகிச் செல்ல இயலும்?
இப்பெருந்துயரில் தொண்டர்களை கைகழுவி வெளியேறிச் சென்றது, தலைமைத்துவமல்ல, கோழைத்தனம். வன்மையான கண்டனத்திற்குரிய சந்தர்ப்பவாதம்.
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கண்டனம்.
