த.வெ.க. மாவட்ட செயலாளர் தலைமறைவு.! –புஸ்ஸி ஆனந்த் எங்கிருக்கிறார்? விஜய் கைது எப்போது?- உச்சகட்ட கோபத்தில் தமிழகம்.!!
பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமறைவு எனத் தகவல்
அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எங்கிருக்கிறார்? என்றும் எந்தத் தகவலும் இல்லை. இந்நிலையில் விஜய்யின் பொறுப்பற்ற செயலால் 39 பேர் பலியான சோக சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட செயலாளர்கள், பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கையை தொடங்கி இருக்கும் தமிழ்நாடு அரசு பலிகளுக்கு முழு பொறுப்பான தவெக தலைவர் விஜய்யை கைது செய்து நடந்து முடிந்த துயர சம்பவத்திற்க்கு பொறுப்பாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். விஜய் கைது எப்போது என்பதுதான் தமிழக மக்களின் தற்போதைய தலையாய கேள்வியாக உள்ளது.
