தூத்துக்குடியில் ஏஐடியுசி கட்டுக்கூலி சங்க ஆண்டுவிழா.!

 

தூத்துக்குடி ஏஐடியுசி கட்டுக்கூலி மூைட சுமை தொழிலாளர்கள் முன்ேனற்றசங்க 35வது ஆண்டு விழா சங்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஞானசேகா் தலைமை வகித்தாா். சங்க செயலாளர் மாாிமுத்து, முன்னிலை வகித்தாா். பொருளாளர் முருகேசன் வரவேற்புரையாற்றினாா். கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன், தொழிலாளா்களுக்கு நினைவு பாிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினாா்.

சுமையேற்றும் இறக்கும் தொழிலாளா்களுக்கு தனி நல வாாியம் அமைக்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். பணியின் போது காயம் ஏற்பட்டால் 50ஆயிரமும் மரணம் ஏற்பட்டால் 5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். அதே போல் இஎஸ்ஐ திட்டத்தில் இணைத்து மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்களை நிறைவேற்றி அரசின் கவனத்திற்கு அனுப்பியுள்ளனா். 

விழாவில் சங்க பொதுச்செயலாளர் கணபதி சுப்பிரமணியன், ஏஐடியுசி மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ், செயலாளர் லோகநாதன், மாநகர கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தனலட்சுமி, நிா்வாகிகள் வக்கீல் முத்துலெட்சுமி, பாலசிங்கம், சுப்பிரமணியன், கிருஷ்ணமூர்த்தி, மாடசாமி,மற்றும் பொண்பாண்டி தட்சணாமூர்த்தி கருணாநிதி கலாஸ்டின் ஜான்டேவிட், பாக்கியசெல்வன் மாாியப்பன் இசக்கி முருகன் முருகன் முத்துராமன் பாலா உள்பட தொழிலாளா்கள் கலந்து கொண்டனா். தலைவர் நன்றியுரையாற்றினாா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!