இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
இந்திய மக்களின் ஜனநாயகத்தையும், இந்திய நாட்டின் இறையாண்மையையும், தேர்தல் மூலம் உறுதிப்படுத்த வேண்டிய தேர்தல் ஆணையம் கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையை பல மாநிலங்களில் பறித்ததைக்கண்டித்தும்.
வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்றவைகள் நம்பகத்தன்மை இல்லாதவை என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியதைக்கண்டித்தும்.
தமிழ்நாடு தேர்தல் ஆணையமும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், தமிழ்நாடு வாக்காளர்களின் உரிமைகளை பாதுகாக்க உரியமுறையில் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சார் ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லய்யா, மோகன், ஞானம் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், மகாராஜன், இந்திய தேசிய காங்கிரஸ் ராஜசேகரன், துரைராஜ், அருள்தாஸ், பழனிச்சாமி, இந்திய கலாச்சார நட்புறவு கழகம் அபிராமி முருகன், மக்கள் நீதி மய்யம் ராதாகிருஷ்ணன், மனித நேயம் மக்கள் கட்சி செண்பகராஜ், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில்குமார், HMS வினோபா, மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார் ஜெகநாதன், வழக்கறிஞர் பாபு, பொன்நகர் சங்கர், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

