தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் 29ம் தேதி சிறப்பு கூட்டம் - மேயர் தகவல்!
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் வருகிற 29ஆம் தேதி வார்டு வாரியாக சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநகராட்சி பகுதிகளிலுள்ள அனைத்து மக்களும் பங்கேற்கும் விதமாக சிறப்பு கூட்டங்களை நடத்திட கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இப்போது பொதுமக்களுக்கு கிடைத்திடும் அடிப்படை தேவைகளான குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, தெரு விளக்கு பராமரிப்பு, சாலைகள், பூங்கா மற்றும் மழைநீர் வடிகால் பராமரிப்பு ஆகியவை குறித்து வருகின்ற 29.10.2025 அன்று கீழ்க்காணும் இடங்களில் வார்டு வாரியாக நடைபெற உள்ளது. ஆகவே மாமன்ற உறுப்பினர்கள் கீழ் காணும் இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் தங்கள் பகுதியினை சேர்ந்த பொதுமக்களை கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்





