திருப்பூர் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண மேயர் தினேஷ்குமார் தலைமையில் மாமன்ற கூட்டம்...குடிநீர் விநியோகம் தாமதம் என அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு.
திருப்பூர் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண மேயர் தினேஷ்குமார் தலைமையில் மாமன்ற கூட்டம்...குடிநீர் விநியோகம் தாமதம் என அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு.
திருப்பூர் மாநகரின் குப்பைக்கு தீர்வு காணும் விதமாக அவசர மாமன்ற கூட்டம், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் அமித், துணை மேயர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அனைத்து தரப்பினரும் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் மேயர் தினேஷ்குமார் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குப்பையை தரம் பிரித்து எடுப்பதில்லை என்றும், அவ்வப்போது குப்பை வாகனங்கள் பழுதாகி சுமார் மூன்று மாதம் முதல் ஆறு மாதங்கள் வரை இயங்கப்படாமல் இருப்பதாகவும், இதனால் குப்பை அழுவதில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதேபோன்று பல்வேறு பகுதிகளில் 12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருவதாகவும் அதிமுக மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் பேசினார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவினருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து குப்பைகள் எடுப்பதற்கு தனியார் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் வர சொன்ன மேயர் அதிகாரிகள் யாரும் வரவில்லை என்றும், மாமன்ற உறுப்பினருக்கு யார் தீர்மானம் செய்யும் அதிகாரி என்றும் தெரியாமல் சில சலசலப்பு ஏற்பட்டது. இதனிடையே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குப்பை பிரச்சனைக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மாமன்ற கூட்டம் நிறைவடைந்தது.
