கோவில்பட்டி: ஓய்வு பெற்ற சிறப்பு உதவி காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்கள் - போலீசார் விசாரணை.!
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி முத்துநகரை சேர்ந்தவர் முனிராஜ்,, காவல் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தனியாக வசித்து வரும் முனிராஜ் கடந்த 16 ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து இருப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து சென்னையில் இருந்த முனிராஜிக்கும், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் முனிராஜ் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஒரு சவரன் நகைகளை திருடி சென்றுள்ளனர்.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துநகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

