திருப்பூர் பத்ரகாளியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா!
திருப்பூரின் 125 ஆண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு நாளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.
திருப்பூர் ரயில் நிலையம் அருகில் காலேஜ் ரோட்டில் உள்ள 125 ஆண்டு பழமையானஅருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் 2வது கும்பாபிஷேக விழா கடந்த செப்.,மாதம் 11ந் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கோவில் கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து 12.09.2025ந் தேதி முதல், 26.10.2025ந் தேதி வரை தொடர்ந்து 45 நாட்கள் சிறப்பு மண்டல பூஜை நடைபெற்றது. மண்டல பூஜை நிறைவு நாளில் நேற்று சிறப்பு யாகம் வேள்வி நடைபெற்றது. இதனை செல்வகுமார் சுவாமிகள், காமாட்சி தாசன் சுவாமிகள் நடத்தி வைத்தனர். தொடர்ந்து 108 சங்குகளால் சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.
பின்னர் மண்டல் பூஜையில் கலந்து கொண்ட கட்டளைதார்களை கெளரவிக்கும் வகையில் அவர்களுக்கு தனித்தனியாக பொன்னாடை அணிவித்து, பிரசாதம் ஆகியவற்றை கோவில் கமிட்டி சார்பில் வழங்கப்பட்டது.அனைத்து நிகழ்வுகளிலும் ஏராளமான பக்தர்கள் தொழில் அதிபர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆசி பெற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு உறு ப்பின்ர்கள் அகஸ்தியன் பழனிசாமி, எஸ்.ரமேஷ், எஸ்.மகேஷ், சி.வெங்கடேஷ், சிவகுமார், மோகன், ரவிக்குமார், பெப்சி பாலு, முருகசாமி, சதீஷ்குமார், பொன்னுசாமி, மோகன்ராஜ், சதாசிவம், மணிகண்டன் மற்றும் ஆர்.ராஜேந்திரன்,சண்முக முதலியார் வம்சவழி பேரன்கள் பி.துரைசாமி, ரவி (எ) வி.முத்துவேல், வி.பத்மநாபன், பி.அண்ணாமலை, ராஜா, என்.சதீஷ், கே.விஜய் மற்றும் வளர்மதி கரு.ராமச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.


