திருப்பூர் குளத்துப்புதூர் குளத்தில் புனிதநீராடி சத்பூஜை கொண்டாடிய புலம்பெயர் தொழிலாளர்கள்
திருப்பூரில் வசிக்கும் வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் திருப்பூர் குளத்துப்புதூர் குளத்தில் புனிதநீராடி சூரியனுக்கு பிரசாதங்கள் படைத்து சத்பூஜை கொண்டாடினார்கள்.
தமிழ்நாட்டில் கந்த சஷ்டி விரதம்கொண்டாடுப்படுவது போன்று பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் நேபாளத்தில் சத்பூஜா விரதம் கொண்டாடப்படுகிறது. வடமாநில மக்கள் சுக்லபட்ச சஷ்டி திதியில் நான்கு நாட்கள் விரதம் இருந்து நான்காவது நாள் சூர்யோதயத்தில் புனிதநீராடி சூரியனுக்கு அர்க்யா என்ற பிரசாதம் படைத்து விரதத்தை நிறைவு செய்கிறார்கள்.
அவ்வாறு செய்வது தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் என்று நம்புகிறார்கள். வேதகாலத்தில் இருந்தே தமிழகத்தில் சஷ்டி விரதமும், வடமாநிலங்களில் சத்பூஜா விரதமும் கொண்டாடப்பட்டு வந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. அந்த வகையில் திருப்பூர் மாநகரில் வசிக்கும் புலம்பெயர் வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் குளத்துப்புதூர் குளத்தில் சத்பூஜையை கொண்டாடும் நிகழ்வானது நடைபெற்றது. நான்கு நாட்கள் கடுமையான விரதம் இருந்த அவர்கள் இன்று அதிகால சூர்யோதயத்தில் குளத்துப்புதூர் குளத்தில் புனித நீராடினார்கள். தொடர்ந்து குளத்தில் நீராடி நீண்ட நேரம் தண்ணீரில் நின்று வழிபட்டனர். சூரியனுக்கு பால் பிரசாதம் (அர்க்யா) படைத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள். பழம், அதிரசம், தானியங்கள் உள்ளிட்ட பலகார வகைகளையும் பிரசாதமாக படைத்து சத்பூஜை விரதத்தை நிறைவு செய்தனர். ‘ தங்கள் திருப்பூரில் நீண்டகாலமாக பின்னலாடை தொழில் நிறுவனங்களில் பணியாற்றுவதால், கூட்டத்தில் ஊருக்கு செல்லவில்லை என்றும், திருப்பூர் குளத்துப்புதூர் குளத்தினை திருப்பூர் கங்கையாக எண்ணி புனிதநீராடி சத்பூஜை விரதத்தை நிறைவு செய்ததாகவும் தெரிவித்தனர். மேலும் திருப்பூர் மாநகரில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இங்கு பண்டிகையை கொண்டாடுவது மகிழ்ச்சி என்றும் அவர்கள் தெரிவித்தனர்.