துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 101 பேருக்கு வேஷ்டி சேலை அாிசி ஓன்றிய செயலாளர் ஓட்டப்பிடாரம் இளையராஜா வழங்கினாா்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடைபராமாிப்பு துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தாா்.
அதன்படி மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா ஏற்பாட்டில் 101 பயனாளர்களுக்கு வேட்டி– சேலை மற்றும் 10 கிலோ அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவித் தொகுப்புகளை ஒட்டப்பிடாரம் மேலமடம் கட்சி அலுவலகத்தில் வைத்து ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

