தூத்துக்குடியில் மழைக்காலத்தில் 24மணி நேரமும் கண்காணிப்பு- மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு.!

 

தூத்துக்குடியில் எந்த மழை வந்தாலும் சமாளித்து எதிர்கொள்வதற்கு மாநகராட்சி நிர்வாகம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருப்பதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடந்தது. மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி முன்னிலை வகித்தார். முகாமில் மேயர் பேசுகையில் "மாநகராட்சி பகுதியில் கடந்த 21 மாத காலமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் அடிப்படையில் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. 

இதில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் புதிய குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை, சாலை, கால்வாய், மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகளுக்கு மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. நான்கு மண்டலத்திலும் சூழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறோம். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மாநகராட்சி சம்பந்தப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 

கடந்த நான்கரை ஆண்டுகளாக திமுக ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. 45 மாதமாக மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு பணிகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. தெற்கு மண்டலத்தில் 673 மனுக்கள் பெறப்பட்டுள்ளது அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19 20 தேதிகளில் 10 செமீ வரை மழை பெய்தது. குறிப்பாக 16,17, 2 ஆகிய வார்டு பகுதிகளில் காலி இடங்கள் அதிகமாக இருப்பதால் தேங்கிய மழை நீர் வடிகால் வாயிலாகவும் மின் மோட்டார் மூலமாகவும் அகற்றப்பட்டு வருகிறது. மற்றப்பகுதிகளில் மழை வெறித்ததும் மழைநீரும் வடிந்தோடுகிறது. 

இந்த பகுதியை பொறுத்தவரை கோரம்பள்ளம் குளம் நிரம்பி 12 கிலோ மீட்டர் தூரம் உப்பாற்று ஓடை வழியாக கடலுக்கு செல்கிறது. புறநகர் பகுதியிலிருந்து ஊருக்குள் வரும் காற்றாற்று தண்ணீரையும் கண்காணித்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல்வாரம் வரை வடகிழக்கு பருவமழை இருக்கும் முழுமையாக எல்லா பகுதிகளிலும் கண்காணித்து வருகிறோம். 

உப்பளத்தை ஓட்டியுள்ள பொன்னாண்டி நகர் மற்றும் கோயில்பிள்ளைநகர் குடியிருப்பபு பகுதியில் தண்ணீர் தேங்குவதாக தகவல் வந்ததையொட்டி அதையும் முறைப்படுத்தியுள்ளோம். அனைத்து பகுதிகளிலும் பாரபட்சமின்றி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். எந்த மழை வந்தாலும் அதை சமாளித்து எதிர்கொள்வதற்கு மாநகராட்சி அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கிறோம். என்று மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

கூட்டத்தில் மாநகராட்சி நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, முனீர்அகமது,  இளநிலை பொறியாளர் செல்வம், துணை பொறியாளர்கள் துர்காதேவி, பாக்கியலட்சுமி, சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், சுகாதாரம் நிர்வாகதுறை அலுவலர்கள் சிவபிரிதா, கௌரி, அழகுலட்சுமி, விக்னேஷ்வரன், சரவணக்குமார், மாரி சத்யா, சிவராம்,  மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் சரவணகுமார், விஜயகுமார், பட்சிராஜ், வெற்றி செல்வன், ராஜேந்திரன், ராஜதுரை,  வட்ட செயலாளர் பிரசாந்த், பகுதிசெயலாளர் மேகநாதன், பொருளாளர் முத்துராஜா, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர், ஆதிதூதர் தேவாலய பங்குதந்தை வில்லியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!