வேலூர் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு இளம் வீரர்கள் தேர்வு வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது - மாவட்ட சங்க தலைவர் நறுவீ சம்பத் தகவல்.
வேலூர் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு இளம் வீரர்கள் தேர்வு வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆர்வமுள்ள 12 வயதுக்கு உட்பட்ட இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவரும் நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி. வி. சம்பத் தெரிவித்துள்ளார்.
இது சமந்தமாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: "கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து சிறந்த கிரிக்கெட் வீரர்களாக உருவாக்கும் பணியில் வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஈடுபட்டுள்ளது. அதன்படி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு12 வயதுக்குட்பட்ட இளம் வீரர்களை தேர்வு செய்வதற்கு வரும் 30-ம் தேதி (30.11.25) காலை 10 மணிக்கு வேலூர் புதிய பைபாஸ் சாலை ராஜேஸ்வரி அம்மையார் வளாகத்தில் உள்ள வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க அகாடமியில் நடைபெறுகிறது. இதில் 01.09.2013 அன்றோ அதற்கு பிறகோ பிறந்து 12 வயதுக்கு உட்பட்டவர்கள் உரிய வயது சான்று, ஆதார் கார்டு மற்றும் கிரிக்கெட் உடையுடன் பங்கேற்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். தேர்வு பற்றிய தகவல்களை மாவட்ட கிரிக்கெட் சங்க கௌரவ செயலாளர் ஸ்ரீதரன் அவர்களை மொபைல் எண் 70105 94657 மூலமாக தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்" என தெரிவித்துள்ளனர்.
செய்தி: வெங்கடேசன் வேலூர் மாவட்ட செய்தியாளர்
