டித்வா புயல்: தூத்துக்குடி மாவட்டத்தில் 556மி.மீ மழை பதிவு - அதிகபட்சமாக காயல்பட்டிணத்தில் 70மி.மீ மழை பதிவு.
வங்கக்கடலில் உருவாகியுள்ள டித்வா புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை முதல் தற்போது வரை தூறல் மழையும், ஆங்காங்கே சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. இதனால் தூத்துக்குடியின் வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை தொட்டு குளிர் நிலவுகிறது.
நேற்று காலை 6.30 மணி முதல் இன்று அதிகாலை 12.30 மணி வரையான 18 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 556. 70. மி.மீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டிணத்தில் 70மி.மீ மழை பதிவாகியுள்ளது. சூரங்குடியில் 63மி.மீ, திருச்செந்தூர் 59.40 மி.மீ, வைப்பார் 49 மி.மீ, குலசேகரப் பட்டிணம் 48.மி.மீ, ஸ்ரீவைகுண்டம் 30.70 மி.மீ, சாத்தான்குளம் 28.60 மி.மீ, மழை பதிவாகியுள்ளது.
